அதிரடியாக உயர்ந்த மதுவின் விலை..!! அதிர்ச்சியில் மதுபிரியர்கள்..!!
தமிழ்நாடு முழுவதும் 5000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.., இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம், பீர், ஒயின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
அதன் படி குவாட்டரின் விலை 10 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.., என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரம் இந்த வகை மதுக்கள் எலைட் மதுபான கடைகளில் மட்டுமே கிடைக்கும் எனவும், உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் உள்நாட்டில் தாயரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்படவில்லை எனவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த திடீர் விலை மாற்றம் குறித்து பல மதுபிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.