அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்க்கு.. யுவன் கொடுத்த ரிப்ளை..!!
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 15ம் தேதி “ஹை ஆன் யுவன்” என்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது அதில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பிய இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா”விற்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியா யுவான்.., நான் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு மலேசியாவில் கிடைத்தது.., மக்களுக்கு மகிழ்ச்சி தர வேண்டும் அவர்களுக்கு என் இசை பிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு முயற்சியில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அந்த இசை நிகழ்ச்சியில் சிலம்பரசனும் கலந்து கொண்டார்.., கலந்து கொண்டு சில பாடல்கள் பாடி அதற்கு நடனமும் ஆடினார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்கப்பட்ட கேள்விக்கு..,
யுவான், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மிகவும் சந்தோசம்.., அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்.., அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அவர் பல உதவிகள் செய்து வருகிறார்.., இன்னும் வந்தால் அவர் பல உதவிகள் செய்வார்.., அவர் அரசியலுக்கு வந்தால்.., அவரின் ரசிகர்களுக்கு அவர் கொடுக்கும் ட்ரீட் ஆக இருக்கும் என யுவான் கூறினார்.