பெரியார், மு.க.ஸ்டாலின், விஜயை அவதூறாக பேசிய பாஜக பெண் செயலாளர்..! நீதிமன்ற காவலில் உமா கார்த்திகேயன்..!!
கோவை மாவட்டம் சிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உமா கார்த்திகேயன், வயது 56. சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் உமா கார்க்கி 26 என்ற பெயரில் சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அவர் பதிவிட்ட ஒரு சில பதிவில் பெரியார், கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் விதமாக, திமுக தலைவர்கள் மீதும் தொடர்ந்து அவதூறு செய்யும் விதமான கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார்.
இதுகுறித்து திமுக ஐடி லிங்க் நிர்வாகிகள் கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் உமா கார்த்திகேயனை சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் உமா கார்த்திகேயனை கைது செய்துள்ளனர். கைது செய்வதற்கு முன்தினம் பாஜக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில். மாநில தலைவர் அண்ணாமலை உமா கார்கிக்கு சிறந்த செயல் பாட்டாளர் என்ற விருது வழங்கி கவரவித்துள்ளார்.
பின் உமா கார்க்கி கைது செய்யப்பட்ட சம்பவம் பாஜக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உமா கார்க்கி மீது அமைதி சீர்குலைக்க முயலுதல் இரு பிரிவுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்துதல் போன்ற 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட உமா கார்த்திகை ஜுலை 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உமா கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் 2 நாட்கள் அனுமதி கேட்டுள்ள நிலையில், இன்று மாலை 5 மணி வரை மட்டுமே விசாரணை செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Discussion about this post