மக்களிடையே பீதி..வாகனங்களை சேதமாக்கும் காட்டு யானைகள்..!
கேரளா மாநிலம் மூணாறில் காரை காட்டு யானைகள் சேதமாக்கியதால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கேரள மாநிலம் மூணாறில் தனியார் தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமான குண்டவளை, புதுக்கடி, செண்டுவாரை, அருவிக்காடு, தீர்த்தமலை, ஸான்டோஸ், சிட்டிவாரை போன்ற பகுதிகளில் கூட்டமாக சுற்றி திரியும் காட்டு யானைகள் விவசாய பயிர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் நேற்று முன் குண்டவளை பகுதியில் வசிக்கும் ஸ்டீபன்-சுமதி ஆகியோரின் வீட்டில் முன் நிறுத்திய காரை காட்டு யானைகள் சேதப்படுத்தி இருக்கிறது, அப்போ சத்தம் கேட்டு கூச்சலிட்டு ஓடி வந்த ஊர்பொதுமக்கள் யானைகளை விரட்டினார்கள்.
இந்நிலையில் அந்த காட்டு யானைகள் சிட்டிவாரை எஸ்டேட் பீல்டு நம்பர் 32 ல் இருக்கும் சோலையில் தங்கியிருப்பதாக, இப்படி தொடர்ந்து இங்கு கூட்டமாக தங்கி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இந்த காட்டு யானைகளை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட, பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.