சிங்கமுத்து மீது வழக்கு தொடர்ந்த வடிவேலு.. ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு..!
நடிகர் சிங்கமுத்து அவர்கள் யூடூப் சேனல் ஒன்றின் பேட்டியில் கலந்துகொண்டு தன்னை இழிவாக பேசியாதாகவும், இதற்கு முன் ஒரு பேட்டியில் வடிவேலு அவர்களை பற்றி, வடிவேலு அவர்களுடன் நடித்து யாரேனும் பெரிய நடிகர் என பெயர் வாங்கிவிட்டால் அவர்களை வடிவேலு அழித்து விடுவதாக கூறியுள்ளார்.
இதுபோல தன்னுடன் நடித்து நல்ல பெயரை பெற்றவர்களை பொதுவெளியில் தவறாக பேசி அவர்களின் மேல் கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் நடிகர் வடிவேலு மீது நடிகர் சிங்கமுத்து குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்த பேச்சை பார்த்த நடிகர் வடிவேலு, உடனே சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் சிங்கமுத்து மீது ரூ. 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
அந்த மனுவில் நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி பல பொய்களை பேட்டியாகவும் இது இல்லாமல் தன்னை தரம் குறைவாக பேசியதாகவும் மனுவில் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் விசாரணைக்கு வந்த அந்த மனுவில் 2 வாரத்திற்குள் பதிலளிக்க சிங்கமுத்து அவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.