ஜம்மு-காஷ்மீர் முதற்கட்ட தேர்தல்..!! 24 தொகுதிகள்..!! பதிவான 3 லட்சம் வாக்குகள்..!!
ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்கிய நிலையில்., காலை முதல் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்..
ஹரியானா மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார்.. ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்த நிலையில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவானது நடைபெற்று வருகிறது
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அதில் முதற்கட்டமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள 8 தொகுதிகளிலும் காஷ்மீரில் 16 தொகுதிகளிலும் இன்று காலை 9 மணிக்கு 24 தொகுதிகளிலும் வாக்குப்பதிவானது தொடங்கியது.. தற்போது வரை 11.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது மாலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. காலை 7 மணிக்கே வாக்களர்கள் தங்களது வாக்குகளை பதிவிட வாக்குபதிவு மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுடைய வாக்கினை பதிவிட்டு வருகின்றனர்..
ஜம்மு காஷ்மீர் மற்றும் காஷ்மீர் முழுவதும் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கலவரங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. 219 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதாலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதாலும் அங்கு துணை ராணுவப் படையினர், ஜம்மு – காஷ்மீர் ஆயுதப்படை போலீஸ் மற்றும் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு மூன்பு ஜம்முவின் எல்லைப்பகுதியில் உள்ள அக்நூரில், பாகிஸ்தான் படைகள் எந்த காரணமும் இன்றி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படை ஜவான் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
நள்ளிரவு சுமார் இரண்டரை மணி அளவில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் துருப்புகள் சுட்டதாகவும் பதிலுக்கு தங்கள் தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே துருப்புகள் சுட்டுக்கொள்வது மிகவும் அபூர்வமாகவே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..