ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது ஏன்..? இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீங்க..!!
ஆடி மாதம் பிறந்த முதல் நாளே அமசவாசையுடன் பிறந்து இருப்பது அனைவருக்கும் சில சந்தேகங்கள் இருக்கும்.., எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் அல்லது ஆடி அமாவாசை கும்பிடுவதா என்று..?
ஆடி அமாவாசை என்பது நம் வீட்டில் மாண்ட தெய்வங்களுக்காக வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான நாள்.., அதுவும் வருடத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை மிக முக்கியமான ஒன்று.
இந்த ஆடி அமாவாசையில் இந்த வழிபாட்டை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இந்த இறந்த முன்னோர்களின் நினைத்து அவர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தால் அது நம் வீட்டில் மாண்ட தெய்வத்திற்கே கொடுப்பதற்கு சமமாகும். அன்றைய நாளில் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து வழிபாடு செய்து வந்தால் இன்னும் சிறந்த பலன் கொடுக்கும்.
ஆனால் ஆடி அமாவாசை கும்பிடும் இல்லத்தார்.., வீட்டில் மணி அடித்து வழிபாடு செய்யக்கூடாது. காரணம் நம் வீட்டின் இஷ்ட தெய்வங்கள் மற்றும் குல தெய்வங்களை கும்பிடும் பொழுது மட்டும் தான் மணி அடிக்க வேண்டும்.., வீட்டில் மாண்ட தெய்வத்தை நினைத்து அவர்களுக்கு சாமி கும்பிடும் பொழுது மணி அடிக்க கூடாது.
சமைத்த உணவை அவர்கள் படத்தின் முன் வைத்து.., தீபம் ஏற்றி கற்பூரம் ஏற்றி வழிபடலாம்.., மற்றும் காகத்திற்கு அந்த உணவை வைக்கலாம்.., முடிந்த வரை 5 ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கலாம். காக்கைக்கு உணவு வைத்து விட்டு தான்.., வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்.
இந்த நாளில் வீட்டில் மாண்ட தெய்வங்களுக்கு மட்டுமின்றி.., குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வழிபடுவதும்.. குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்னும் புண்ணியம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம்.., பசுவிற்கு கீரை கொடுக்கலாம்.
வீட்டில் வாசலில் கோலமிட்டு ஒரு சிலர் பூஜைகள் தொடங்குவார்கள்.., ஆனால் வீட்டில் மாண்டவர்களுக்கு சாமி கும்பிடும் பொழுது கோலமிட கூடாது.., அப்படி கோலமிட்டு வழிபட்டால்.., நம் வீட்டிற்கு வர நினைப்பவர்கள் வராமலே சென்று விடுவார்களாம்.
மேலேயும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், மற்றும் திருத்தலங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..