எந்த கட்சி வந்தாலும் 2026ல்…!! துணை முதலமைச்சர் பதில்..!!
விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்றிருந்தார்.. அப்போது பேசிய அவர்.,
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை எதிர்த்து யார் போட்டியிட்டாலும்., யார் கூட்டணி வைத்துக்கொண்டு எதிர்த்து யார் போட்டியிட்டாலும் சரி. எந்த திசையில் இருந்து வேண்டுமானாலும் வரட்டும்., டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, புதிதாக வரும் கட்சியும் சரி., எத்தனை பேர் வந்தாலும் வெற்றி திமுகவிற்கு மட்டுமே என தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது., விக்கிரவாண்டி, அரசூர், திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளித்த மக்களுக்கும்., கழக நிர்வாகிகள், இளைஞரணியினர் மற்றும்
எனது அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது, நன்றியை மட்டுமின்றி அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..