வெள்ளிக்கிழமை எந்த நவகிரகத்தை வழிபட்டால் சிறப்பு..?
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் மட்டுமே செய்து விட்டு வருகின்றனர்.., ஆனால் அங்கிருக்கும் கொடிமரம், பலிபீடம்.., பிரகாரம் மற்றும் நவகிரகங்கள்.., எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி அறிந்திருப்பதில்லை.
நவகிரகங்களை வழிபடும் பொழுது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், மற்றும் சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் இடமிருந்து வலப்புறமாக சுற்ற வேண்டும். ராகு, கேதுவை வலமிருந்து இடது புறமாக சுற்ற வேண்டும். என்று தான் பலரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
நவகிரகங்கள் இருக்கும் நிலையை வைத்தே ஒரு மனிதன் எப்படி வாழப்போகிறான் என்று அந்த காலத்தில் கணித்து விடுவார்களாம். அப்படி போற்றப்படும் நவகிரகங்கள் எந்தெந்த கிழமைகளில் வழிபட்டால் சிறந்த பலன் கொடுக்கும் என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
இந்நாளில் சுக்கிரபகவானை வழிபாடு செய்து வந்தால் எல்லாம் நன்மைகளும் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்துக்கொள்ள முடியாமல், ஒரு சில தடைகளால் உங்கள் வாழ்க்கை துணையுடன் சேர முடியாமல் தவிப்பவரா நீங்கள்..? கவலையே வேண்டாம்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரபகவானை வழிபாடு செய்யலாம். சுத்தி இருக்கும் தடைகளை நீக்கி, நீங்கள் மனதில் நினைத்தவருடனே திருமணம் செய்துக்கொள்ளும் வரத்தை சுக்கிரபகவான் கொடுப்பார்.
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சுக்கிர பகவானை வழிபடலாம்.., ஆண்கள் வழிபாடு செய்தால் நல்ல மனைவி கிடைப்பார் என்று ஆன்மீக தகவல்கள் சொல்லப்படுகிறது.
சுகபோக வாழ்க்கை வேண்டும் என நினைப்பவர்கள் நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரனை வழிபாடு செய்து வரலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..