வீட்டில் யாரும் இல்லா சமயம்.. மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. கொடூர சம்பவம்..!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், முதல் கணவரை பிரிந்த நிலையில், தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சாந்திக்கும், விமல் குமார் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இவர்கள் இரண்டு பேரும் மறுதிருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு, முதல் கணவருக்கு பிறந்த குழந்தையுடன், சாந்தியும், விமல் குமாரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத பல்வேறு சமயங்களில், சாந்தியின் மகளை, விமல் குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதன்காரணமாக, அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த விமல்குமார், சிறுமியை கடத்திச் சென்று, கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, தாய் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விமல் குமாரை, 2 மாதங்களாக தேடி வந்தனர்.
தற்போது, திருப்பூர் மாவட்டத்தில், சிறுமியுடன் அவர் சிக்கியுள்ளார். பின்னர், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், சிறுமியை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர்.