”சங்கத்தில் இருந்து விலகினாலும்”… விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மோகன்லால்..!
மலையாளத் திரைப்படத்துறை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்க கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே. கேமா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிடம் தனது அறிக்கையை 2019 டிசம்பரில் சமர்ப்பித்திருந்த நிலையில் ஹேமா கமிட்டியில் அளித்த அறிக்கை விவரங்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை கூறிவருகின்றனர். முன்னணி திரைக் கலைஞர்கள் மீது வைக்கப்பட்டு வரும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
மலையாள திரைப்படம் நடிகர்கள் சங்கத்தின் ப்ரெசிடண்ட் பொறுப்பில் இருக்கும் நடிகர் மோகன்லால் பாலியல் குற்ற சம்பவத்திற்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில் திடீரென பதவியின் இருந்து ராஜினமா செய்ததிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேரள திரையுலகை உலுக்கிய பாலியல் புகார்கள் குறித்தும் அவர் மீது வரும் விமர்சனங்கள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். அதாவது அப்போது பேசிய அவர், “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.
பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த போலீஸ் உள்ளது. அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் புகார்களால் பெருமை மிகுந்த கேரள சினிமா சிதைந்து போய் உள்ளது என்றும் குழு கலைக்கப்பட்டாலும் சங்கத்தின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படமால் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். சங்கத்தில் இருந்து விலகினாலும் இந்த பிரச்சனைகளை கூர்ந்து கவனித்துக்கொண்டு தான் உள்ளோம். தயவு செய்து கேரள சினிமாவை தகர்த்து விட வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.