வாழைப்பழ அல்வா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் 2
சர்க்கரை கால் கப்
நெய் தேவையானது
ஏலக்காய்த்தூள் 1 ஸபூன்
முந்திரி 10
செய்முறை:
ஒரு மிக்ஸியில் வாழைப்பழத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலில் அரைத்த வாழைப்பழத்தை சேர்த்து கிளறவும். வாழைப்பழம் கெட்டியானதும் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து கிளறவும்.
அதில் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும். நெய் உறிஞ்சி அல்வா திரண்டு வரும் வரை கிளறவும்.
அல்வா திரண்டு கெட்டியாக வந்ததும் முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.
அவ்வளவுதான் வாழைப்பழம் அல்வா தயார்.