வீட்டிலேயே கருவளையத்தை சரிச்செய்யலாம்..!!
இன்றைய காலக்கட்டத்தில் இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதும் பகலில் டிவி, மொபைல் போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துபவரும் அதிகமாகிவிட்டார்கள்.
இதனால் உடலின் ஆரோக்கியமானது கெடுவதுடனும் கண்களுக்கு சோர்வு மற்றும் கருவளையம் ஆகியவையும் ஏற்படுகிறது.
இவற்றை தடுக்க வீட்டிலேயே சில வழக்கங்களை கடைபிடிக்கலாம், அவற்றை பற்றி பார்ப்போம்.
துளசி:
துளசியில் இருக்கும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாவை எதிர்த்து போராடி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கிறது.
சருமத்தில் துளசியை பயன்படுத்தும்போது அது கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தையும் நீக்குகிறது.
குங்குமப்பூ:
குங்குமப்பூவில் இருக்கும் குரோசின் மற்றும் கரோட்டின் பண்புகள் சருமத்தில் நுழைந்து சருமத்தை பிரகாசமாக்கவும் கண்களை சுற்றி இருக்கும் பகுதிகளை வெண்மையாக்கவும் உதவியாக இருக்கிறது.
நெல்லிக்காய்:
நெல்லிக்காயில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள், வைட்டமின் சி மற்றும் கொலாஜன் ஆகியவை சருமத்தில் உண்டாகும் முதுமையை தடுக்கிறது. மேலும் சருமத்தை பளப்பளபாகவும் இளமையாகவும் வைத்திருக்கும்.
தேன்:
தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் சருமத்தில் ஆழமான ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இது சருமத்தில் இருந்து சருமத்தை பொலிவாகவும் கருவளையம் நீங்கவும் உதவியாக இருக்கிறது.
கொழுப்பு வகை உணவு:
வேர்கடலை, முந்திரி, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை மாலையில் சாப்பிடுவதினால் இதில் இருக்கக்கூடிய நல்ல வகை கொழுப்புகள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை தடுக்கிறது.
வெல்லம்:
வெல்லத்தில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண்களி சுற்றி இருக்குக் கருவளையத்தை நீக்குகிறது.
மேலே சொன்ன குறிப்புகளை பயன்படுத்தும்போது அது கண்களை சுற்றி வரும் கருவளையத்திற்கு நல்ல தீர்வாக அமைகிறது.