சொத்திற்காக மகன் செய்த செயல்.. போலீஸ் வலைவீச்சு..!
பூவிருந்தவல்லி அடுத்த பாரிவாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் இவருக்கு சொந்தமான 4 சென்ட் நிலம் உள்ளது. இதனை அவரது மகன் வெங்கடேசன் தனக்கு கொடுக்குமாறு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் தந்தை ராஜேந்திரனுக்கும் மகன் வெங்கடேசன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தான் ஓட்டும் வேனைக் கொண்டு ராஜேந்திரனை முட்டி தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பூவிருந்தவல்லி காவல்துறையினர் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய வெங்கடேசனை தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும் மகன் வெங்கடேசன் திட்டமிட்டு வாகனத்தை கொண்டு இடித்து கொலை செய்தாரா அல்லது விபத்தாக நிகழ்ந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்திற்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்