அஜித் ரசிகர்களுக்கு குட் நீயூஸ்.. விரைவில் மங்காத்தா 2 அப்டேட்..!
மங்கத்தா:
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஐித் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஐித்தின் 50வது திரைப்படமான இதில் திரிசா, அர்ஜுன், லக்ஷ்மி ராய், அஞ்சலி , ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நல்ல வரவேற்ப்பை பெற்ற இப்படம் வசூலில் வேட்டை ஆடியது.
குறிப்பாக கடந்த 2007ஆம் வெளியான பில்லா திரைப்படத்தின் வசூலை முறியடித்தது. மங்கத்தா திரைப்படம் வெளியாகி, பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் இதுபோன்ற தரமான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவே இல்லை.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் எதிர் பார்த்து காத்திருந்த நிலையில் அதனை உறுதி படுத்தும் விதமாக ஒரு விஷயம் நடந்துள்ளது.
மங்காத்தா 2 பேச்சு வார்த்தை:
அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக மீண்டும் அஜித் சென்ற நிலையில், அஜர்பைஜான் தலைநகர் பகுவிற்கே சென்று வெங்கட் பிரபு அவசர அவசரமாக அஜித்தை சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்புக்கு பின்னணியில் என்ன காரணம் இருக்கும் என ரசிகர்கள் ஏகப்பட்ட யூகங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகின்றனர்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம், தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், மங்காத்தா 2-வின் பேச்சுவார்த்தைக்காக, இருவரும் சந்தித்து இருப்பார்கள் என்றும் நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் அஜித் வெங்கட் பிரபு கூட்டணிக்காக காத்துகொண்டு இருப்பதாகவும் கருத்து கூறி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்