ரோஹித் சர்மா செய்தது ரொம்ப தப்பு..!! ஆத்திரமான யுவராஜ் சிங்..!! உலககோப்பை ஜெயிப்போம் என்ற நம்பிக்கையே இல்ல சொன்ன சிறந்த பந்து வீச்சாளார்..?
இந்திய அணித் தேர்வில் கேப்டன் ரோஹித் சர்மா செய்த தவறை சுட்டிக் காட்டி இருக்கிறார் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.
2023 உலகக்கோப்பை போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், ரோஹித் சர்மா அணித் தேர்வில் செய்த தவறை சுட்டிக் காட்டி இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார் யுவராஜ் சிங்.
“யுஸ்வேந்திர சாஹலை“ அணியில் இருந்து நீக்குவது தவறான ஒரு முடிவாக இருக்கிறது. வேதனையளிக்கும் ஒரு முடிவாகவும் இருக்கிறது. குறைந்தபட்சம் அவரை அணியில் மாற்று வீரராக கூட வைத்திருக்கலாம்.

ஒரு லெக் ஸ்பின்னர் (குல்தீப்) உங்களுக்கு எப்போதும் விக்கெட்டுகளை வீழ்த்துபவர். குல்தீப் அற்புதமான வீரராக செயல்பட்டு வருகிறார். ஆனால் சாஹல் டர்னிங் டிராக்குகளிலும், மெதுவான பிட்ச்களிலும் ஆபத்தானவராக இருக்கக் கூடிய ஒருவர். ஹர்திக் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்பவர் யுஸ்வேந்திர சாஹலை அணியில் தேர்ந்தெடுத்திருக்கலாம், என யுவராஜ் சிங் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்..
உலக கோப்பை வெல்வோம் என நம்பிக்கை இல்லை :

ஹர்திக் பாண்டியா இருப்பதால் மூன்றாவது வேகபந்து வீச்சாளர் அணிக்கு தேவை இல்லை. அதற்கு பதிலாக சாஹலை ஆட வைக்கலாம் என யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், “ஆசியக் கோப்பையை வெல்வதால் உலகக் கோப்பையை வெல்வதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும், இந்தியா நல்ல ஃபார்மில் இருப்பதையே இது உணர்த்துகிறது” என இந்தியாவுக்கு எச்சரிக்கை ஒன்றையும் கொடுத்துள்ளார் யுவராஜ்.,
Discussion about this post