பெட்ரோல் பங்க மேற்கூரை இடிந்து விழ இதுதான் காரணம்..!! சற்றுமுன் வெளியான பல திடுக்கிடும் தகவல்..!!
சென்னை இன்று நள்ளிரவு சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் திடீரென பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது..,
மேலும் அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.., இன்னும் 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
திடீரென விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய பல திடுக்கிடும் தகவல் சற்றுமுன் நம் மதிமுகமிற்கு கிடைத்துள்ளது..
சென்னை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது.. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்து வந்த நிலையில்.. மழை என்றும் பாராமல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வழக்கம்போல வேலை செய்துள்ளனர்.., சில வாகன ஓட்டிகள் அந்த சமையம் பெட்ரோல் பங்கின் உள் தஞ்சம் அடைந்துள்ளனர்..,
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது. இதனால் அதன் அடியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர்.
அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் மீட்கப்பட்டனர். இதில் 4 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மட்டும் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.. இன்னும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளனர்…
இதற்கிடையே தான் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது.
அதாவது நேற்று சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் பலத்த காற்றுடன் வீசிய கனமழை பெய்ததால்.., பெட்ரோல் பங்கின் மேற்கூரையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.. மேலும் அதிவேகமாக வீசிய காற்றால் ஒரு நொடியில் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி விபத்துக்கு மற்றொரு விஷயமும் முக்கிய காரணம் என சொல்லபடுகிறது..
அதாவது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விபத்து குறித்த அளித்த பேட்டியில், ‛‛பெட்ரோல் பங்க்கின் மேற்கூரையை 2 தூண்கள் தான் தாங்கி இருந்துள்ளது” மேலும் அதன் மேற்கூரை அமைத்து 16 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் மேற்கூரை 2 தூண்களால் மட்டுமே தாங்கியுள்ளது., இன்னும் கூடுதல் தூண்கள் கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம் என கூறியுள்ளார்…
Discussion about this post