தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வளர்ந்திருக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டி ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செட்டில் தான் என்று பேசியுள்ளார். இதனால் அவரது சினிமா யூனிவெர்ஸ் விரிவடையும் என்று உறுதியாகியுள்ளது.
மாநகரம் படம் முதல் விக்ரம் படம் வரை தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜைகளும் நடந்து முடிந்துவிட்டது. இந்த வருடம் அவர் இயக்கி உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றிபெற்று மிக பெரிய வசூலை ஈட்டியது. இதனை தொடர்ந்து அவர் அடுத்து மீண்டும் விஜய்யை இயக்க உள்ளதாலும் இந்த படம் லோகேஷ் சினிமெட்டிக் யூனிவெர்சில் இணையுமா என்ற எதிர்ப்பார்ப்பாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவரின் அடுத்த படங்களான சினிமாட்டிக் யூனிவெர்ஸ் பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு பதிலளித்த அவர், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில் என்னால் கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் போன்ற கதாபாத்திரங்களை வைத்து முழுநீள படங்களை என்னால் எடுக்க முடியும் என்றும் இதனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தான் செட்டில் ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சினிமாட்டிக் யூனிவெர் கான்செப்டில் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் அதிகமாகியுள்ளது.