பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா..? மல்லிகார்ஜுன கார்கேவின் அடுக்கு கேள்விகள்..!
பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா என மாநிலங்கள் அவையில் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி எதுவும் பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்து கின்றனர்.
இந்த விவாதத்திற்கு எல்லாம் பிரதமர் பதில் அளிக்க மாட்டார் என பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர். பல கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்ட பின்னரே.., பிரதமர் மோடி என்ன பரமாத்மாவா என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். கார்கேவின் அந்த பேச்சு தொடர் முழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவையில் மதியம் இரண்டு மணி வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் எந்த விதியின் கீழ் விவாதம் நடத்துவது என்பதில் சற்று குழப்பம் ஏற்பட்டதால் அதுவும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
மேலும் மக்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டுள்ளனர், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என முழக்கம் எழுப்பியுள்ளனர். இந்த மக்களவை கூட்டம் மதியம் 12மணி வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
Discussion about this post