தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, “தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று பேசியதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக கூட்டத்தில் வானதி சீனிவாசன், நாராயணன், கரு.நாகராஜன் ஆகியோர் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அண்ணாமலையை கலாய்த்த பாஜக நிர்வாகி:
அதிமுகவோடு கூட்டணி வேண்டாம் என்றும் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் அண்ணாமலை பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டதும், நாராயணன் திருப்பதி ‘தலைவர், தான் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்; மாநில நிர்வாகிகளை இப்படி அடிக்கடி உளறி குழப்பத்தில் ஆழ்த்தக்கூடாது. வார் ரூம் பிரச்சனையால் இப்போது கட்சியில் பல குழப்பங்கள் இருக்கிறது. இதில் இந்த மாதிரி பேசுவது தலைவருக்கு அழகல்ல” என்று பேசியுள்ளார். அப்போது பல அண்ணாமலை ஆதரவாளர்கள் நாராயணனை ‘பேசாதே உட்காரு ‘ என்று கோஷமிட்டு உட்கார வைத்துள்ளனர்.
வானதி கொடுத்த கறார் அட்வைஸ்:
வானதி சீனிவாசன் பேசும்போது “தேசியகட்சியான பாஜக, கூட்டணி முடிவுகளை தலைமையகத்தில் தான் முடிவு செய்யமுடியும். அதனால் கோர் கமிட்டியில் பேச வேண்டியதை நிர்வாகிகள் கூட்டத்த்தில் பேச வேண்டாம். இது என்ன வார் ரூம் மீட்டிங்கா?” என கடுமையான வார்தைகளால் அறிவுரை கூறியுள்ளார். உடனே அண்ணாமலை ஆதரவாளர்கள், வானதி சீனிவாசனையும் கடுமையாக கிடண்டல் செய்து உட்கார வைத்திருக்கிறார்கள்.
கண்ணீர் விட்ட கரு.நகராஜன்:
அண்ணாமலை எந்த காரணத்திறகாகவும் ராஜினாமா போன்ற முடிவை எல்லாம் எடுக்கக்கூடாது என கரு.நாகராஜன் கண்ணீர் வடித்துள்ளார். இதைப் பார்த்து அண்ணாமலையின் எதிர் தரப்பினர் சிரித்ததாக கூறப்படுகிறது. இதனாலும் கூட்டத்தில் சின்ன சலசலப்பு எழுந்துள்ளது.
சைலண்ட் ஆக்கப்பட்ட அமர்:
கூட்டத்தில் நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அமர் பிரசாத் ரெட்டி எழுந்து, அண்ணாமலையின் எண்ணத்தை நிறைவேற்ற பாஜக தொண்டர்கள் போர்ப்படை வீரர்களாக உள்ளனர். வார் ரூம் இருக்கிறது. இங்கு உங்களை எதிர்த்து பேசிய தலைவர்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். வேறு எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது என கூறியுள்ளார். அமர் உடைய பேச்சைக் கேட்டு கடுப்பான அண்ணாமலையின் எதிர் அணியினர் “உன்னால் தான் அனைத்திற்கும் பிரச்சனை, நீ பேசக்கூடாது உட்காரு” என சத்தம் போட்டு உட்காரவைத்துள்ளனர்.
இதுக்கு மேலே விட்டால் எங்கே இரண்டு கோஷ்டிகளும் அடி, தடியில் இறங்கிவிடுவார்களோ என்ற பதட்டத்தில் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு பெரிய தலைகள் ஒவ்வொருவராக வெளியேறியதாக கூறப்படுகிறது.