தமிழக மீனவர்களுக்காக முதலமைச்சர் செய்த செயல்..?
இலங்கை நாட்டை சேர்ந்தவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து கோரி மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் “ஜெய்சங்கருக்கு” முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும்.., ஆகஸ்ட் 21ம் தேதி மட்டும் பல சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்..,
இந்த தாக்குதல் சம்பவம் மீனவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது அதுமட்டுமின்றி அவர்களின் வாழ்க்கையையும் அதிகம் பாதிக்கிறது.., இந்திய மீனவர்களை தாக்குவதோடு அவர்களின் பொருட்களையும் கொள்ளையடித்து சென்று விடுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் தாக்கப்பட்டு.., பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு சிறை பிடித்து செல்வதாகவும்.., அங்கு அவர்கள் தாக்கப்பட்டு 10 நாட்கள் பின் விடுதலை செய்யப்பட்டு அதன் பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறன்றனர்.
இதை மத்தியஅரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.., இந்த தாக்குதலில் ஈடுபடும் இலங்கை மீனவர்களை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் பாதுக்காப்பு நலன் கருதி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுதுறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..