உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டியில் நுழைந்துள்ள பிரக்ஞானந்தா நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதி வருகிறார்.
உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் ப்ரக்ஞானந்தாவும், நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதி போட்டிக்குள் இந்தியா நுழைந்துள்ள நிலையில் ப்ரக்ஞானந்தாவின் வெற்றிக்காக இந்தியாவே எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
நேற்று நடந்த இறுதி போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ப்ரக்ஞானந்தா சிறப்பாக விளையாடினார். ஒரு கட்டத்தில் ஒரே ஒரு காயை நகர்த்துவதற்காக கார்ல்சன் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். அந்தளவிற்கு பிரக்ஞானந்தாவின் வியூகம் இருந்தது.
ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிற்கு முதல் சுற்று ட்ரா ஆனது. இந்நிலையில் இன்று இரண்டாவது சுற்று நடைபெறுகிறது. இதில் வெற்றிபெற்று உலகக்கோப்பையை ப்ரக்ஞானந்தா வெல்ல வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக உள்ளது.