மத்திய அரசு தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்து அது தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்விகளை முன்னிறுத்தியுள்ளது.
மத்திய அரசின் கனரா தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த அருண் கோயல் கடந்த வாரம் விருப்ப ஓய்வு பெட்ரா நிலையில் கடந்த திங்கட்கிழமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் முதல் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி நவம்பர் 17ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு எடுத்த பிறகு மத்திய அரசு அருண் கோயலை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்துள்ளது.
ஒரே நாளில் அருண் கோயல் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி? அதில் பின்பற்றபட்ட நடைமுறைகள் என்ன? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவர் எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கபட்டுள்ளார்? இவ்வளவு நாட்கள் மத்திய அரசு என்ன செய்தது? என்று சரமாரியாக மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்தான விளக்கத்தை செவ்வாய்க்கிழமை நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது