தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று நடைபெற்றது இதில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை திமுக அரசு என்றும் பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் வாழ்வாதரங்களை பற்றி ஆலோனைக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் இன்று முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் உரையாற்றினார். அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை என்றும் திமுக அரசு பாதுகாக்கும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வல்லுனர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்று அந்த கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு மாநாடுகளிலும்,நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.