உளறி கொட்டும் முட்டாளிடம் என்ன கேட்க முடியும்..?
கடந்த வாரம் சென்னை அசோக்நகர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் “தன்னை உணர்ந்த தருணம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக பரம்பொருள் அறக்கட்டளையில் இருந்து மகாவிஷ்ணு என்ற நபர் மாணவர்கள் முன் பேசுகையில்.. கடந்த ஜென்மத்தில் அவரவர் செய்யும் பாவங்களை பொறுத்தே இந்த ஜென்மத்தில் ஊனமுற்றோராக பிறக்கிறார்கள்.. உங்கள் மனதில் பாரம் இருக்கிறதா..? மனம் அழுத்தம் உள்ளதா என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது..
மகாவிஷ்ணு பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்.., நீங்கள் பேசுவது தவறு என கண்டித்துள்ளார்.. இந்த சர்ச்சையானது பூகம்பமாக வெடித்த பின்னரே.. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்..
இதுகுறித்து நான் சொல்லவருவது என்னவென்றால்.. “ஒரு மூடனை, முட்டாளை பள்ளியில் பேச அழைக்கிறோம், பேச வருபவர்களும் நாம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் நெஞ்சை நிமிர்த்தி முண்டா தட்டுகிறான். உடனே சங்கிகள் பார்த்தீர்களா பார்த்தீர்களா திராவிட கோட்டையிலேயே வந்து கர்ஜித்த சிங்கத்தை என்று புளங்காகிதம் அடைகிறார்கள்.
பேசிய அந்த முட்டாள், எல்லாம் பூர்வ ஜென்ம பலன் என்றான், அப்போது எனக்குள்ளே சில கேள்விகள் எழுந்தது… குழந்தை இல்லாத தம்பதிகள், மனமாகாத ஆண், பெண், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், உடலிலே உபாதைகள் உள்ளோர், இப்படி பல குறைபாடுகளோடு ஏராளமானோர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.
மந்திரத்தில் நெருப்பு வர வைக்க முடியும், மழை வரவைக்க முடியும், பறக்க முடியும் என்று உளறிக் கொட்டுகிற அந்த முட்டாளிடம் நாம் கேட்க விரும்புவது மேற்சொன்ன குறைபாடுகளை களைய என்ன மந்திரம் இருக்கிறது..?
பாஜகவில் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி விசாரிக்க வேண்டும் போல இருக்கிறது.. என்று அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக இருந்த சி.டி.இரவி பேசி இருந்தார். அடுத்த வீட்டு பெண்களிடம் தவறாக நடக்கும் பாஜகவினரை திருத்த என்ன மந்திரம் இருக்கிறது என்று சொல்வானா அந்த மகாவிஷ்ணு..?
மற்றொரு கேள்வி ஒருவருக்கு நோய் வயப்பட்டால் அதாவது சர்க்கரை நோயோ அல்லது புற்றுநோயோ, இதயநோய் இருந்தால்.. அதை பூர்வ ஜென்மம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தானே ஏன் மருத்துவரிடம் வைத்தியம் பார்க்க செல்ல வேண்டும்.. இது போன்ற பல கேள்விகள் என் மனதில் உள்ளது..
இதுபோன்ற பல கேள்விகள் என்னுளே என்ற குறிப்பில் அடுத்த ஒரு தகவலை பற்றி பார்ப்போம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..