“மாணவர்கள் ரீல்ஸ் மோகம்..” ஆசிரியர் பணி நீக்கம்..!! ஆசிரியர் மீதே தவறு..!!
பள்ளி சீருடையில் வளைகாப்பு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர் ., அந்த விவகாரத்தில் வகுப்பு ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் தான் பல கேள்விகள் இருக்கிறது அதை பற்றி விரிவாக படிக்கலாம்..
தற்போது இணையத்தில் ஒரு செயல் வைரலாக பரவி வருகிறது.. அதாவது வேலூர் மாவட்டம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு சக மாணவிகள் சேர்ந்து வளைகாப்பு செய்வதை போல நடித்து ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிடுள்ளனர்.. அதாவது ஒரு வளைகாப்பு செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் (வளையல், பூ, சந்தனம், பன்னீர் ) மற்றும் சாப்பாடு உட்பட அனைத்துப் பொருட்களையும் வைத்து, மாணவிக்கு நலங்கு வைத்து ரீல்ஸ் செய்துள்ளனர்…
அதிலும் அந்த வளைகாப்பு செய்யப்பட்ட மாணவிக்கு வயிற்றில் துணியை கட்டிகொண்டு கர்ப்பமாக இருப்பதை போல நடித்துள்ளார்.. இந்த இன்ஸ்டா குயின்கள்.. இந்த ரீல்ஸ் வைரலாக வேண்டும் என்பதற்காக.. ஒரு டிஜிட்டல் இன்விடேஷன் (அழைப்பிதழ்) தயார் செய்து.. அதில், தேதி, நேரம், இடம் என எல்லாவற்றையும் அச்சடித்து உள்ளனர்.
இந்த போலி வளைகாப்பு இணையத்தில் பதிவிடப்பட்டு ஒரு மாதம் அவது குறிப்பிடத்தக்கது., இப்படி இருக்கையில் நேற்று வேலூர் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி அந்த மாணவர்களின் வகுப்பு ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்கள் செய்த தவறுக்கு ஆசிரியர் ஏன் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கேள்வியை தான் பலரும் எழுப்பி வருகின்றனர்., இதை பற்றி முழுதாக நம் களத்தில் மதிமுகமில் படிக்கலாம்…
மாத., பிதா., குரு., தெய்வம் என சொல்லுவார்கள்.. அப்படியாக நாம் தெய்வத்திற்கு முன்னும் பெற்றோர்களுக்கு அடுத்த படியாக நாம் மதிக்க பட வேண்டியவர்கள் ஆசிரியர்.. ஒரு மாணவன் படித்து முடித்து உயர்ந்த பதவிக்கு சென்றால் அது அவர்களுடைய முன்னேற்றம் என சொல்லும் சமூகம்., மாணவர்கள் தவறான பாதையில் சென்றால் மட்டும் அதற்கு காரணம் ஆசிரியர் மீது என ஏன் சொல்ல வேண்டும்..?
சரி., ஆசிரியர்கள் வேலையை மாணவர்களை திருத்துவது தான். அப்படி அந்த மாணவர்களை கண்டிதால் மட்டும் அவர்கள் திருத்தி கொள்கிறார்களா..? இல்லை.. ஆசிரியர் கண்டித்தால் தற்கொலை முயற்சி., ஆசிரியரை தாக்குவது போன்ற செயலில் ஈடுபட்டு அதற்கும் ஆசிரியர்களையே குற்றம் சாட்டுகிறார்கள்..
சரி அதைவிடுங்க இந்த மாணவர்கள் வளைகாப்பு நடத்தியதற்கும் ஆசிரியர் தான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்கள்.? இதில் தான் பல கேள்வி..?
மாணவிகள் ரீல்ஸ்காக வளைகாப்பு செய்ய சென்ற இடம் பள்ளியின் விளையாட்டு மைதனாம்., அவர்கள் ரீல்ஸ் செய்த இடத்திற்கு பின்னடி பார்த்தாலே தெரிகிறது., வகுப்பை கட்டடித்து விட்டு இந்த ரீல்ஸ் நடந்ததா இல்லை உணவு இடைவேளியில் நடந்ததா என முதல் கேள்வி..?
அதை ஏன் நாம் கேள்வியாக முன்வைக்கிறோம் என்றால்..? அந்த இடைவேளை சமயத்தில் நடந்திருந்தால் வகுப்பு ஆசிரியருக்கு எப்படி மாணவியின் வளைகாப்பு பெற்றி தெரிந்து இருக்கும்.. அப்படி தெரிந்து இருந்தால் ஆசிரியர் முன்னரே தடுத்து நிறுத்தி கண்டித்து இருக்க மாட்டார்களா..?
இரண்டாம் கேள்வி..? ஒரு வேளை., உணவு இடைவேளைக்கு பின் நடந்து இருந்தால்..? வகுப்பில் அந்த குறிபிட்ட மாணவர்கள் வகுப்பில் இல்லாததை கண்டு மற்ற மாணவர்களிடம் கேட்டு இருப்பார்.. ஆனால் சக மாணவர்களின் பதில் மட்டும் என்ன ரீல்ஸ் செய்ய போயிருங்க்காங்க டீச்சர் என்றா சொல்லி இருப்பாங்க..? எனக்கு தெரியல டீச்சர்., நான் பார்க்கல அப்படி தான் சொல்லுவாங்க.
அதுக்கு அப்புறம் அந்த டீச்சர் என்ன பண்ணுவாங்க அட்டனென்ஸ் எடுத்து விட்டு பாடம் எடுக்கவோ அல்லது டெஸ்ட் வைக்கவோ அவர்களின் வேலையை தொடங்கி இருப்பாங்க.., பின் மறுநாள் மாணவர்கள் வகுப்பிற்கு வராதது பற்றி கேள்வி கேட்டு இருப்பாங்க., ஆசிரியர்களுடைய பணியை அவர்கள் செய்து கொண்ட இருக்கையில் மாணவர்களின் விளையாட்டு தனத்திற்கும் ஆசிரியர்களே காரணம் என்றால் எப்படி..?
இதை பற்றி நம் மதிமுகம் முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு பேசிய போது ., மாணவர்கள் வகுப்பிற்கு வரவில்லை என்றாலோ., வகுப்பில் இல்லை என்றாலோ ஆசிரியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.., வகுப்பு ஆசிரியரின் கவனக்குறைவே இதற்கு காரணம் என கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..
உதாரணத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பித்து விட்டால்.. அதற்கு எப்படி மருத்துவமனையும் மருத்துவர்களும் பொறுப்பு ஆகிறதோ அதே போல தான் இந்த விஷயமும் மாணவர்கள் செய்யும் தவறுக்கு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் பொறுப்பு ஆகிறது…
ஒரு ஆசிரியர் மாணவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தாலும் குற்றம்..? நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்றாலும் குற்றம் என சொன்னால்.., தவறான பாதையில் செல்லும் மாணவர்கள் மீது ஆசிரியர் என்ன நடவடிக்கை தான் மேற்கொள்ள வேண்டும்.. இதை பற்றி ஏன் யாரும் பேசவில்லை என்பதே கேள்வி குறியாகியுள்ளது ..
நம் மதிமுகம் எழுப்பிய கேள்விகள் சரியா..? தவறா என பதில் அளித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..