“மாமன்னா நீ ஒரு வடிவேலு பட பாணியில் விளக்கம் கொடுத்த குகன்..”
தற்போது காட்டு தீயாக பரவி வரும் விஷயம் மாற்றுதிறனாளிகள் குறித்து பள்ளி மாணவர்கள் முன்னிலையில் மகாவிஷ்ணு பேசியது தான்.. இப்படி இருக்க மகாவிஷ்ணுவின் ஆதாரவாளர்கள் கொடுத்த விளக்கம் பேசுப்பொருள் ஆக்கியுள்ளது..
மேடைபேச்சாளர் மகாவிஷ்ணு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக சென்றுள்ளார் அப்போது.. அவர் பேசியதாவது “கடந்த ஜென்மத்தில் அவரவர் செய்யும் பாவங்களை பொறுத்தே இந்த ஜென்மத்தில் ஊனமுற்றோராக பிறக்கிறார்கள்.. உங்கள் மனதில் பாரம் இருக்கிறதா..? மனம் அழுத்தம் உள்ளதா என கேட்டுள்ளார்.. அது பெரும் சர்ச்சையாக வெடித்தது அதன் பின் அவரை எப்படி அவ்வாறு பேச அழைக்கலாம் என பள்ளிக்கல்விதுறை கேள்வி எழுப்பி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசியை திருவள்ளூர் அரசு பள்ளிக்கு மாற்றும் செய்தது..
அதன்பின் மாற்றுதிறனாளிகள் சங்கத்தினர் மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளனர்.. அந்த புகாரின் பேரில் இன்று அஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த மகாவிஷ்ணுவை காவலர்கள் கைது செய்துள்ளனர்…
அதன் பின் மகவிஷ்ணுவின் ஆதரவளார் குகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தமிழுக்கு எப்போதும் இரண்டு அர்த்தங்கள் உண்டு அதில் ஒன்று வெல்லும் மற்றொன்று நம்மை கொல்லும்.. ஒருவர் பேசும் பேச்சில் நாம் அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும்… புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் “இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வரும் மாமன்னா நீ ஒரு மாமா மன்னா.. என சிங்கமுத்து சொல்லும் போது வடிவேலு கோவப்பட்டு திட்டுவார்…
அதன் பின் சிங்கமுத்து நான் சொல்லியதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் நான் சொன்ன வார்த்தையின் அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும்..
அப்படி தான் அண்ணன் மகாவிஷ்ணு பேசியதும் அவர் சொன்ன வார்த்தையின் அடுத்த வார்த்தையை சொல்ல வருவதற்குள் அவரை யாரும் பேச விடவில்லை.. ஊனமுற்றவர்களை காயப்படுத்த வேண்டும் என்பது அவரின் நோக்கம் அல்ல.. அப்படி யாரவது காயப்படிருந்தால் அண்ணனிற்கு பதில் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.. “சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார்ட் சொன்னது போல கங்கா சந்திரமுகியா நின்னா.. சந்திரமுகியா மாறுனா.. அது மாதிரி தான் இந்த சர்ச்சையும்.. இன்று அண்ணனை கைது செய்து இருந்தாலும் இரண்டு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் ஜாமீன் எடுக்க முடியாது.. விரைவில் அண்ணனை விடுவிப்போம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..