இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 90-வது விமானப்படை தினம் சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் விமானப்படை அதிகாரிகளுக்கு ஆயுத அமைப்பு கிளை ஒன்றை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் அனைத்து வகையான நவீன ஆயுதங்களையும் கையாள முடிவதுடன் ரூ.3,400 கோடி வரை மிச்சப்படுத்த முடியும். விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னி பாதை திட்டத்தின் கீழ் பெண்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்னி பாதை திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் வீரர்களை தெரிவுசெய்வது ஒரு சவாலான விஷயமாகவே இருக்கிறது என்றார்.
கடந்த ஓராண்டாக போர் சேவைகளைத் தவிர, நாட்டின் பல சவால்களும் இந்திய விமானப்படை தனது பங்களிப்பை செய்துள்ளது. தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் நிலைநிறுத்த படுவதாகவும், போர்ப் பதற்றம் உள்ள பகுதிகளில் இருந்து இந்தியர்களை மீட்டு வருவதாகவும் அனைத்து பணிகளும் சிறப்பாக செயல்பட்டது.
பாரம்பரிய முறைகள், ஆயுதங்கள் ஆகியவை நவீனமாகவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலும் மாற்றமடைய வேண்டும். கடந்த கால மனநிலையுடன் நாம் எதிர்கால சிக்கல்களை கையாள முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.