“நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரி.., ஆன்மிகத்திற்கு அல்ல”..
சென்னை செனாய் நகரில் திமுக தகவல் தொழில் நுட்ப சார்பில் சமூகவலைத்தளங்கள் தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.., இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்
இதில் கலந்து கொண்ட பேசிய அவர் பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின் என கலைஞர்.. சொன்னார் பேச்சாலும் எழுத்தாலும் வளர்த்த இயக்கம் தான் “திமுக” தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக வளர்ந்து வரும் ஒரே இயக்கம் திராவிட மாடல் இயக்கம்..
தற்போது சீவிடுவேன் சீவிடுவேன் என சொல்லுகிறார்களே அப்படி யாருடைய தலையை திமுக எடுத்தது.., இவர்கள் சொல்லி கொண்டு இருக்க.., தலையை எடுக்கும் பழக்கம் திமுகாவிற்கு கிடையாது.., ஒருவரை தலையை நிமிர செய்யும் அளவிற்கு வளர வைப்பதே திமுகாவின் பழக்கம்..
தந்தை பெரியார்.., அறிஞர் அண்ணா, கலைஞர் சென்ற பாதையில் தான் திமுக அரசு சென்று கொண்டு இருக்கிறது சமூக ஊடகங்களில் திமுகாவின் கொள்ககை பெரும் அளவில் புரட்சி செய்து வருகிறது.., தவறான பேச்சுக்கள் மூலம் நீங்கள் எங்களை பின் தள்ளினாள்.., அதை நாங்கள் பாசிட்டிவ் ஆக மாற்றி கொள்வோம்..
சமூக வலைத்தளம் என்பது ஒருவரை மேலே எடுத்து செல்லும்.., அதே சமூக வலைத்தளம் ஒருவரை கீழேயும் தள்ளிவிடும்.. அதை பாஜக புரிந்துக்கொள்ள வேண்டும்..
என் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் எந்த கோவிலுக்கு சென்று வருகிறார் என்பதை நோட்டமிடுவதையே பாஜக ஒரு வேலையாக செய்து வருகிறது.., என் மனைவி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவிலுக்கும் செல்வார்.., அது அவரின் விருப்பம் என் மனைவி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று அவரை போட்டோ எடுத்து இங்கே பாருங்க ஸ்டாலின் மனைவி என ஹாஸ்டாக் ஸ்டாலின் மனைவி என சமூக வலைதளைங்களில் போஸ்ட் செய்வது போன்றவற்றை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளனர்..
பாஜகவின் சாதி தன்மை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே எதிரானது.., ஒட்டுமொத்த மனித இனத்திற்கே எதிரானது.., சாதி.., மதம் என்ற பெயரால் நாட்டையே பிளவு படுத்தி கொண்டிருக்கும் கூட்டத்தை எதிர்த்து போராடி கொண்டு இருக்கிறோம்., இந்த போராட்டத்தின் வெற்றி சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும்.., நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரி.., ஆன்மிகத்திற்கு அல்ல”.. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறே பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..