சிம்பலான அழகு குறிப்புகள்..!
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூள் கலந்து உடல் முழுக்க தேய்த்து பின் பயித்தம் பருப்பு மாவு சேர்த்து குளித்து வர சருமம் பளபளப்பாக மின்னும்.
வீட்டில் தேநீர் போட்டதும் மீதம் இருக்கும் தேநீர் பொடியில் எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டையும் கலந்து, தலையில் தேய்த்து பின் அலசிவர முடி பொலிவாக மாறும்.
நகங்களை வெட்டுவதற்கு முன் நகங்களில் எண்ணெய் தேய்த்து சிறிது ஊற வைத்து பின் வெட்டினால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அழகாக வெட்டலாம்.
லேசான சூடு உள்ள நீரில் இரண்டு ஸ்பூன் உப்பு கலந்து அதில் கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.