அல்லு அர்ஜுன் கைது செய்ய காரணம்..? வெளியே வந்ததும் சொன்ன பதில்..?
இறந்தவரின் குடும்பத்தினருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4ம் தேதி திரையிடப்பட்டது. அதனை காண நடிகர் அல்லு அர்ஜுன் சென்றுள்ளார்.
அப்போது அவரை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். அப்போது அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் உயிர் இழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆந்திரா காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று அவரது வீட்டில் கைது செய்துள்ளனர்.
ஒருநாள் முழுவதும் அவர் நீதிமன்ற காவலில் இருந்துள்ளார்..
இன்று அந்த வழக்கை விசாரணை மீதான விசாரணை தெலுங்கானா உயர்நீதிமன்றம் நீதிபதி அமர்வு முன் வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அல்லு அர்ஜுன் நான் சட்டத்தை மதிப்பவன் அதனால் தான் சிறையில் இருந்தேன், நான் சிறை சென்றதற்காக வருத்தப்பட்ட எனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்” என்று கூறி நிதியுதவி அளித்துள்ளார்.