விதிமுறையை மீறிய விஷால்..!! சென்னை உச்சநீதி மன்றத்தில் வழக்கு..!!
லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
அந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படத்தின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி நடிகர் விஷால் நிறுவனம் செயல்பட்டதாக அதன் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஏன் இன்னும் பணத்தை செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பணத்தை செலுத்த தயாராக இருப்பதாகவும், லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.