இனி திருப்பதிக்கு நீங்களும் வேகமா பறக்கலாம்..!!
திருப்பதி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திருப்பதி திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 28 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள்.., மற்ற பேருந்தை விட வேகமாகவும் பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படாத வகையிலும் இருக்கும் என தெரிவித்துள்ளது..,
இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது..
Discussion about this post