இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி , டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். விராட் கோலியின் திறமைக்கு நாம் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. ஆனால், கிரிக்கெட் விளையாடி அவர் சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.1,050 கோடி என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இந்திய அணியின் ஏபிளஸ் பிரிவு வீரரான இவர் ஆண்டுக்கு பிசிசிஐயிடம் இருந்து 7 கோடி சம்பளமாக பெற்றார். போட்டி கட்டணமாக ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்கு 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் டி20 போட்டிக்கு 3 லட்சம் வழங்கப்பட்டது நடப்பு ஐ.பி.எல் சீசனில் 21 கோடி கொடுத்து ஆர்.சி.பி அணி அவரை வாங்கியது.
இதுவெல்லாம் கிரிக்கெட்டில் இருந்து கிடைத்த வருவாய் மட்டுமே. அடுத்தது, விளம்பரங்களில் அவர் கோடி கோடியாக சம்பாதிக்கிறார். பூமா, எம்.ஆர்.எப், ஆடி உள்ளிட்ட 18 முக்கிய பிராண்டுகளுக்கு கோலி விளம்பரத்தில் நடித்து வருகிறார். ஒவ்வொரு நிறுவனத்துடனும் ஆண்டுக்கு 7.5 கோடி முதல் 10 கோடி வரை ஒப்பந்தம் செய்துள்ளார். இதுவே, ஆண்டுக்கு 175 கோடியாக இருக்கிறது.
‘அடுத்து , இன்டாவில் கோலியை 6.8 கோடி பேர் பின்பற்றுகின்றனர். இதில், ஒரு பதிவுக்கு 11.5 கோடி கிடைக்கிறது. எக்ஸ் பதிவுக்கு 2.5 கோடி கிடைக்கிறது. அதோடு, பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். எப்.சி கோவா என்ற கால்பந்து அணியின் கோ உரிமையாளராகவும் உள்ளார்.
விராட் கோலிக்கு மும்பை ஒர்லியில் 34 கோடி மதிப்பில் அபார்ட்மென்ட் உள்ளது. கிர்கானில் 80 கோடிக்கு சொத்தும் அலிபாக்கில் பிரமாண்ட பண்ணை வீடும் அமைந்துள்ளது.