தாயகம் திரும்பிய வினேஷ் போகத்.. உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. கண் கலங்கிய..!
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்தமனுவை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு சுக்கு நூலக நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். எனினும், தகுதி நீக்கம் காரணமாக அவரால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை உருவானது.
இந்தநிலையில் சோகத்துடன் பாரீசிலிருந்து விமானம் மூலம் தனது தாயகம் திரும்பிய வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள், மற்றும் வீரங்கனைகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை கண்டு கண் கலங்கிய வினேஷ் போகத் கைகளைக் கூப்பி அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் “நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி! துரதிருஷ்டவசமாக நான் வெற்றிபெற முடியவில்லை” என்று கூறினார்.
-பவானி கார்த்திக்