தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட பெண்..! பிறந்த குழந்தையை கொலை செய்த காதலன்..!!
பிறந்த குழந்தையை பாலித்தீன் பையில் எடுத்து சென்ற காதலன்… பரபரப்பான கேரளா..
கேரள மாநிலம் ஆலப்புழா பூச்சக்கல் பகுதியை சேர்ந்த டோனா ஜோஜி (வயது 22) கடந்த இரண்டு நாட்களாக வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது.. வலி தாங்க முடியாத டோனா கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு டோனாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்..
டோனா ஜோஜிக்கு கடந்த வாரத்துக்கு முன் குழந்தை பிறந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனை சார்பில் காவல் துறையில் தகவல் தெரிவித்துள்ளனர்.. காவலர்கள் டோனோவிடம் விசாரணை நடத்திய போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.., டோனோ ஜாஜி., தாமஸ் ஜோசப் இருவரும் காதலித்து வந்து நிலையில் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.. இதனால் டோனோ ஜாஜி கர்பமாகியுள்ளார்..
டோனோ ஜோஜி அந்த கர்ப்பத்தை கலைப்பதற்காக சில மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். கர்ப்பம் கலைந்திருக்கும் என நினைத்த டோனா ஜோஜி சாதாரணமாக இருந்துள்ளார். 7 மாதங்களுக்கு பிறகு குழந்தை கலையவில்லை என்பது தெரியவந்தது.. பெற்றோருக்குத் தெரியாமல் கர்பத்தை மறைத்ததுடன்., வீட்டில் யாருக்கும் தெரியாத வகையில் ஆகஸ்ட் 7ம் தேதி அதிகாலை டோனோ தனக்கு தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையை பெற்றெடுத்ததுடன் தொப்பிள் கொடியையும் அவரே கட் செய்துள்ளார்.
அதன்பின் குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு தனது காதலன் தாமஸ் ஜோசப்பிடம் கொடுத்துள்ளார். குழந்தையை வாங்கிய தாமஸ் ஜோசப்பும்., அவரது நண்பரும் சேர்ந்து குழந்தையை மண்ணில் புதைத்துள்ளனர்.. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாமஸ் ஜோசப்,மற்றும் அவரது நண்பர் அசோக் ஜோசப் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிறந்த பச்சிளம் குழந்தையை மனசாட்சி இல்லாமல் காதலர்களே கொலை செய்த சம்பவம் ஆழப்புலாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. டோனோ ஜோஜி மற்றும் தாமஸ் இருவரும் காதலித்தது அவர்கள் வீட்டிற்கு தெரிந்து இருவரின் திருமணத்திற்கும் சம்மதித்துள்ளனர்… என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..