நாடு முழுவதும் ஆக.31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெங்களூர் மாநகராட்சி பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்துக்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டு வரும் விழாக்களில் விநாயகர் சதுர்த்தி ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்ண்டாட்டங்கள் பெரியளவில் இல்லாமல் இருந்தன.
தற்போது கொரோன தளர்வுகள் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் பிரம்மாண்டமான சிலைகளை வைக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்துவருகின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாகப் பெங்களூரு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அது ஆக.31 அன்று சதுர்த்தி காரணமாக இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது.