கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக் கல்வித் துறை குறைத்து நிர்ணயித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட குறைவான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது.
கட்டணத்தை உயர்த்தி வழங்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், கல்வி கட்டணத்தை தமிழக அரசு குறைந்துள்ளது.
அவ்வாறு எல்கேஜி, யுகேஜி மற்றும் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ரூ.12,076 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 6, 7 மற்றும் 8 -ஆம் வகுப்பிற்கு ரூ.15,711 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post