விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலவரம்..! தொடர் முன்னிலையில் இருக்கும் கட்சி..?
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த மாவட்டத்திற்கு கடந்த ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிமுதல் எண்ணப்பட்ட வாக்கு நிலவரப்படி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் 798 வாக்குகள் ஒரே சுற்றில் 2 மேஜையில் எண்ணப்பட்டது. இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 30 நிமிடங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, பிறகு மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டது.
திமுக – 4148
பாமக – 1900
நாதாக – 49
2,248 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அந்நியூர் சிவா முன்னிலை வகிக்கிறார்.
அன்னியூர் சிவா (திமுக)- 12,002 வாக்குகள்,
அன்புமணி (பாமக )- 5,904 வாக்குகள்,
அபிநயா (நாதக)- 849 வாக்குகள்.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 6 ஆயிரத்து 98 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
தற்போது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல் இரண்டு சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 6 ஆயிரத்து 98 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..