விக்ரம் 62 அடுத்த அப்டேட்..? வைரலாகும் வீடியோ..!
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் ஒருவர் விக்ரம். பின்னனி பாடகர், தயாரிப்பாளார் ஆவார். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களிலும் அவருடைய காதபாத்திரத்துக்கு தானே குரல் கொடுக்கும் பெருமைக்குரிய நடிகர் இவர். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த சேது, சாமி, பிதாமகன் ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து இவர் விக்ரம் என்னும் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் தற்போது “வீர தீர சூரன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.சேதபதி,சித்தா ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அருண்குமார் தான் இப்படத்தின் இயக்குநர் ஆவார்.
விக்ரமின் 62வது படமான வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசைமக்கிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகும் வீர தீர சூரன் :
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. முதலில் இதன் இரண்டாம் பாகம் படமாக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது.
இந்நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உங்கள் அன்பிற்கு என்றும் நான் அடிமை கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் கமென்ட்கள் குவிந்து வருகிறது.
– பவானி கார்த்திக்