கண்கள் இருப்பது உன்னை ரசித்திட..! லட்சுமிமேனன் 28..?
கேராளாவில் ராமகிருஷ்ணன் உஷா ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் தான் லட்சுமிமேனன்.., இவர் கேராளவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்துக்கான இளங்கலை படிப்பை முடித்தார்..
மலையாளத்தில் வெளியான “ரகுவிண்டே சவுந்தம் ரசியா” படத்தின் மூலம் முதன் முதலாக சினிமாவில் கால் பதித்தார்.., ஆனால் இவரின் முதல் தமிழ் படம் “சுந்தர பாண்டியன்” இந்த படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
முதல் படமே லட்சுமிமேனனுக்கு மிக பெரிய ஹிட் கொடுத்தது என சொல்லலாம்.., இந்த படத்தில் அவரின் நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது..
அதன் பின் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அதிகம் வர தொடங்கியது., இவரின் இரண்டாவது வெற்றி படமாக அமைந்த படம் தான் “கும்கி“. முதல் படத்தில் ஹிட் அடித்தது போல இந்த படமும் அவருக்கு மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்திற்கு பின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வர தொடங்கினார்.., அதற்காக கடந்த 2012ம் ஆண்டு இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.
அதன் பின் குட்டிப்புலி., மஞ்சப்பை, பாண்டிய நாடு.., நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், றெக்க, மற்றும் புலிக்குத்து பாண்டி என பல படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமல்ல எனக்கு நடனமும் நன்றாக வரும் என லட்சுமி மேனன் நடத்தில் அசத்திய படம் தான்.., பாண்டிய நாடு இதில் “பை ..பை.. பை கலாய்ச்சி பை கருப்பா நீ வாயேண்டா” என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படி உச்சத்தில் இருந்த லட்சுமி மேனன் சில காரணங்களால் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.., இருப்பினும் நடனம் மீது உள்ள ஆர்வத்தால்.., பரத நாட்டிய கலையை கற்றுக்கொண்டு சமூக வலைத்தளமான “இன்ஸ்ட்டா கிராமில்” ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சில காதல் காட்சிகளில் நடித்தாலும்.., உடல் தெரியும் அளவிற்கு ஆடை அணியாமல் நடித்த ஒரு சிறந்த நடிகைகளில் “லட்சுமி மேனனும்” ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது..
இன்று வரை பலரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகை “லட்சுமி மேனன்” தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இன்று தனது 28 வது பிறந்த நாளை கொண்டாடும் நம்ப வீட்டு பொண்ணு “லட்சுமி மேனன்” அவர்களுக்கு ரசிகர்கள் சார்பாகவும் மதிமுகம் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
– லோகேஸ்வரி.வெ