மிஸ்டர் அண்ட் மிஸஸ்..! வனிதாவின் அடுத்த ஜோடி இவரா..?
முன்னனி நடிகைகளுள் ஒருவர் வனிதா விஜயகுமார். இவர தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜயுடன் இனணந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தின் முலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமனார்.
2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைப்பெற்ற பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட இவர் வனிதா விஜயகுமாரில் இருந்து வத்திக்குச்சி வனிதா என மக்களால் அழைக்கப்பட்டார்.
நடன இயக்குரான ராபட் ராஜ் நடிகர், இயக்குநர், நடுவர், வில்லன் என பல தறைகளில் பணியாற்றி உள்ளார். ராபர்ட் தனது சினிமா வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக 1991ல் வெளியான “அழகன்” என்ற படத்தில் மம்முட்டியின் மகனாக தொடங்கினார், என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக்பாஸ் சீசன்6ல் கலந்து கொண்டார்.
நடிகை வனிதா மற்றும் ராபட் இருவரும் 2013ல் லில் விங் டு கெதரில் வாழ்ந்தாக கூறப்படுகிறது.
பின்னர் இருவருக்கும் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மீண்டும் இணையும் ராபட் மாஸ்டர் வனிதா :
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான சூட்டிங் பாங்காங்கில் தொடங்கியுள்ளது. அங்குள்ள மாரியம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகிறது.
“மிஸ்டர் அண்ட் மிஸஸ்” என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ராபட்க்கு ஜோடியாக வனிதா நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து அம்மா அப்பாவாக ஸ்ரீகாந் மற்றும் ஷாகிலா நடிக்க இருப்பதாகவும் பிரேம்ஜி, சுனில் ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா தயாரிப்பு துறையில் ஒரு முக்கிய பணியில் இருகிறார். இந்த படத்தை ஆஸ்தேரிலியாவை சேர்ந்த தொழில் அதிபர் தயாரிக்க இருகிறார். அவர் வனிதாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
– பவானி கார்த்திக்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..