சீமான் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என விஜயலட்சுமி உருக்கத்துடன் தெரிவித்து தான் கொடுத்த வழக்கை வாபஸ் செய்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக வைத்திருப்பது விஜயலட்சுமி சீமான் விவகாரம் தான். இந்நிலையில் நேற்றிரவு வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு தனது வழக்கறிஞருடன் நேரில் வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறி காவல்துறையிடம் கடிதம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, சீமான் மீது புகார் தெரிவித்த தன்னிடம் தான் காவல்துறையினர் அதி தீவிரமாக விசாரித்தனர் , சமூக வலைதளங்களிலும் தன்னைப் பற்றி நிறைய அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடும் மந்தமாக இருந்தது. தன்னால் முடிந்த அளவில் போராடி விட்டேன், இனி சட்ட ரீதியாக போராட தன்னிடம் சக்தி இல்லை. நான் இனி சென்னைக்கு வர மாட்டேன், பெங்களுருக்கே சென்று விடுகிறேன்.
சீமானிடம் பேசினேன் வழக்கை வாபஸ் பெற்று விட்டேன். வழக்கை தொடர்வது சென்னைக்கு வருவது இனி இல்லை இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை.போலீசாரின் நடவடிக்கை மெதுவாக இருந்தது. 20 சம்மன் அனுப்பினாலும் ஒன்றும் செய்ய முடியாது என சீமான் கூறிவிட்டார். சீமான் புல் பவராக உள்ளார்.சீமான் எப்போதும் நன்றாக இருக்கட்டும் எப்போதும் வெற்றியோடு இருக்கட்டும் .
சீமானை தற்போது ஒன்றும் செய்ய முடியாது. நான் சீமானிடம் காசு வாங்கவில்லை.சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டு வருவது முடியவில்லை அதனால் அவர் பவராக உள்ளார். இந்த சட்டப் போராட்டத்தில் சீமானே வெற்றி பெற்றதாக கூறிய விஜயலட்சுமி, அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று கண்கலங்கினார்.
இதையும் படிக்க : கட்சியை பதிவு செய்யும் நடிகர் விஜய்… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!