கடந்த வாரம் இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பெற்றோராக இருப்பதை சமூகவலைத்தளம் மூலம் அவர் தெரிவித்தார். இதற்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறி வந்தனர் இந்நிலையில், பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்தினார்.
ராஜா ராணி முதல் பிகில் வரை இயக்கிய அணைத்து படங்களிலும் வெற்றியை மட்டுமே கொண்டுள்ள அட்லீ, நடிகர் விஜயை வைத்து மூன்று தொடர் வெற்றிகளை பெற்றார் இதனால் நடிகர் விஜய்க்கு அட்லீ மீது தனி அக்கறை இருக்கிறது. இயக்குனர் அட்லீயே தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். இவரின் பதிவை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அவரது மனைவி பிரியாவிற்கு நேற்று வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர். இந்த விழாவில் அட்லீயின் நெருங்கிய உருவாவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் நடிகர் விஐயும் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் ஒரு பரிசையும் கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டார் இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது. மேலும் விஜயின் அடுத்த படங்களில் ஒரு படத்தை இயக்குனர் அட்லீ இயக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது.