தாஜ்மஹாலுக்கு சொத்து, தண்ணீர் வரி கட்ட கோரி மீறி வரி கட்டாமல் இருந்தால் 15 நாட்களில் தாஜ் மஹாலுக்கு சீல் வைக்கப்படும் என்று இந்திய தொல்லியல் துறைக்கு ஆக்ரா மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி எச்சரித்துள்ளது. அந்த நோட்டிஸில் ரூ. 1.5 லட்சம் சொத்துவரி மற்றும் ரூ.1.9 கோடி குடிநீர் வரியை செலுத்தக் கோரி தாஜ்மஹால் நிர்வாகத்திற்கு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது வரி செலுத்தாவிட்டால் அடுத்த 15 நாட்களில் சீல் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் ராஜ்குமார் படேல், நினைவு சின்னங்களுக்கு வரி விதிக்கப்படாது மற்றும் வணீகரீதியாக தண்ணீரை பயன்படுத்தினால் தான் தண்ணீர் வரி வசூலிக்கபட வேண்டும் தாஜ்மஹால் வளாகத்திற்குள் பசுமையை பராமரிக்க தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தாஜ் மகாலுக்கு சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி விதிப்பது இதுவே முதன்முறை அல்லது இந்த நோட்டிஸ் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார்.
இதை தொடர்ந்து, நகராட்சி ஆணையர் நிகில் டிஃபண்டே கூறுகையில், தாஜ் மஹாலின் வரி தொடர்பான நடவடிக்கைகள் பற்றி தனக்கு தெரியாது என்றும் புவியியல் ஆக்ரா முழுவதும் புவியியல் தகவல் அமைப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதில் அரசு கட்டிடங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்து வளாகங்களுக்கும் நிலுவையில் உள்ள வரி தொகையை கணக்கெடுக்கப்பட்டு தான் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் தொல்லியல் துறையினரிடம் இருந்து பெறப்படும் பதில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நகராட்சி ஆணையரின் கருத்தை தொடர்ந்து ஆக்ரா சுற்றுலா நல வாரிய செயலாளர் விஷால் சர்மா கூறுகையில், இந்த நோட்டிஸ் அதிர்ச்சியை அளிக்கிறது என்றும் தாஜ் மகால் ஒன்றிய அரசின் சொத்து, பாரம்பர்ய நினைவு சின்னத்திற்கு எதற்கு வரி நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், தாஜ்மஹால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக 1920-ல் அறிவிக்கப்பட்டது. 102 ஆண்டுகளில் நினைவுச்சின்னத்திற்கு வீட்டுவரி நோட்டீஸ் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் கூட தாஜ் மகாலுக்கு வீடு வரி விதிக்கவில்லை என்று கூறினார்.