தமிழகத்தில் கடந்த மதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தென்மணடல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 17ம் தேதியிலிருந்து 23ம் தேதி வரையிலான மழையின் பதிவு வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 22 மாவட்டங்களில் பருவமழையின் அளவு குறைந்துள்ளதாகவும் இயல்பை விட மிகவும் குறைவான அளவில் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.16 மாவட்டங்களில் போதிய அளவிலான மழை பெய்யவில்லை என்றும் அவரை தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நவம்பர் 25 முதல் டிசெம்பர் 8ம் தேதி வரை மழையின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி பெய்தது குறிப்பிடத்தக்கது.