மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து கடந்த ஜூன் மாதத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது என்று அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் ஜூன் மாதம் 23ம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கினார். இளையராஜா மற்றும் அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா இருவரும் இப்படத்திற்கு இசையமைத்தனர். ஜூனில் திரை அரங்கில் வெளியான மாமனிதன் திரைப்படத்திற்க்கு மக்களிடம் போதுமான ஆதரவு பெறவில்லை இந்நிலையில் அந்த திரைப்படம் ஓடிடி யில் வெளியானது அதைத்தொடந்து இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Happy to Share #Maamanithan movie has Officially selected for screening on November 30- 04 December 22 International Film Festival #Dioramaiff
New Delhi@YSRfilms @thisisysr @ilaiyaraaja @VijaySethuOffl @SGayathrie @onlynikil @Riyaz_Ctc @gurusoms @sreekar_prasad @onlynikil pic.twitter.com/5lTn2AtitD— Seenu Ramasamy (@seenuramasamy) November 25, 2022
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள டியோராமா சரவதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் இதற்கு முன்பே ட்ரீம் கேட்சர் மற்றும் அர்பா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.