விமான நிலையத்தில் வேல்முருகன் செய்த சம்பவம்..! மீண்டும் மீண்டுமா..?
இதுபோல் பாடகர் வேல்முருகன் கடந்த மாதம் திருச்சி செல்வதற்காக வேல்முருகன் சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்வதை போல, வேல்முருகனையும் சோதனை செய்துள்ளனர்.
அதனை பொறுத்துக்கொள்ள முடியாத வேல்முருகன் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.., இதனால் இரவு 11மணிக்கு மேல் விருகம்பாக்கம் டூ ஆற்காடு சாலையில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே போரிகார்டு போட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற பின்னணி பாடகர் வேல்முருகன் பேரிக்கார்டை நகர்த்திவிட்டு காரை இயக்கியுள்ளார்.., இதனை கண்ட மெட்ரோ மேலாளர் காரை நிறுத்தி அந்த பக்கம் செல்லுமாறு வேல்முருகனிடம் கேட்டுள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து.., இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் வடிவேலுவை தாக்கியுள்ளார். அதில் வடிவேலுவுக்கு காயம் ஏற்படவே சத்தம் கேட்டு அங்கு வந்த ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வடிவேலு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்., புகாரை ஏற்ற காவல்துறையினர், வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.