வெளியான 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!! இவ்வளவு மாணவர்கள் தேர்ச்சியா..?
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி, மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3.89 லட்ச மாணவர்களும், 4.30 லட்ச மாணவிகள் என மொத்தம் 8.20 லட்ச பேர் தேர்வு எ ழுதினர்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.
இதில் 96.02 சதவித பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடமும், 95.56 சதவித பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடமும், 95.23 சதவித பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளன.
மொத்தம் 91.17 சதவித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43 சதவித சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், 11 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல் பெற மற்றும் மறு கூட்டல் கோரி நாளை முதல் 20 ஆம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேவர்கள் மாவட்ட சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..