மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னே வாகன திருட்டு..!!
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு காவல்துறை மெத்தனம் கண்காணிப்பு கேமராக்களும் பழுதடைந்ததால் அதிகாரிகள் செய்வதறியாது திகைப்பு அரசு ஊழியர்களின் வண்டிகளுக்கு திருடர்கள் குறிவைத்து திருட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்ககோரிக்கை.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளது. இதற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன தினசரி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி வந்து செல்கிறது.
பொதுமக்கள் அரசு ஊழியர்கள் தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை வளாகத்தினுள் நிறுத்திவிட்டு சென்று திரும்பி வந்து பார்த்தால் இருசக்கர வாகனங்கள் காணாமல் போகிறது. இதுவரையில் இந்தவளாகத்தில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சில மாதங்களில் திருட்டு போய் உள்ளது. ஆனால் சத்துவாச்சாரி காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்பும் போடப்படவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்களும் பழுதாகியுள்ளது. இதனால் இது திருடர்கள் திருட வழி வகை செய்துள்ளது.
நேற்று துணை வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகாவின் வாகனம் திருடு போனது இதே போன்று செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும் ஊழியர் சுப்பிரமணி என்பவரின் விலை மதிப்பு மிக்க வாகனமும் திருடு போனது தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதால் அரசு ஊழியர்களும் பொது மக்களும் இருசக்கர வாகனங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி அச்சப்படுகின்றனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் தீர்வு காணவும் பாதுகாப்பு ஏற்பாடு களை பலப்படுத்தவும் சிசிடிவி கேமராக்களை ஆங்காங்கே அமைக்கப்பட்டவைகள் செயல்படும் வகையில் இருக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Discussion about this post